Monday, May 21, 2007

தூவானம் ஆக தொடரும் செய்திகள்........


உலகக் கிண்ண போட்டிகள் முடிவடைந்தாலும், மழை விட்டும் தூவாணம் நிற்காதது போல அது தொடர்பான பிரச்சினைகள், அவற்றில் சில அணிகள் கண்ட தாக்கங்கள், ICC றகு எதிரான கருத்துக்கள் என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றன.

இறுதிப்போட்டிகளிற்கு முன்னதாக உலகின் தலை சிறந்த தமிழ் வர்ணனையாளர்களுள் ஒருவரான அப்துல் ஜபார் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே உரையாடும் போது பதிவு செய்தது இது. அவரின் காந்தக்குரலுக்கு அவரது அழகான அனாசயமான அற்புதத்தமிழுக்கு ஒரு வணக்கம் சொல்லலாம். நீண்ட நாட்களாக தனியார் வானொலிகளின் 'அழகு(?)' தமிழில் மூழ்கி கிடந்த நாம் அவரின் குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவரது வர்ணனைகள் கேட்டவர்களுக்கு தெரியும் அவரின் மகத்துவங்கள். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஆடுகளத்தில் போட்டிகள் நடந்தால் அங்கே அப்துல் ஜபார், வி.ராமமுர்த்தி, மணி ஆகியோரின் கணீர் குரல்கள் சென்னை வானொலியை அழகுபடுத்தும். நான் ரசித்த இந்த குரலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.








குறிப்பு:- மார்வன் அத்தபத்துவை (Marvan Attapattu) பற்றி கதைத்த பின்னர் அவர் கதைப்பது மத்தியூ ஹைடன் (Mathew Hyden) பற்றியது. இடையிடையே தமக்கும் ஏதோ தெரியும் என்பது போல அவரின் உரையாடலை குழப்பும் குரல்கள் வரும். சற்று அவர்களை மன்னித்து பொறுத்தருள்க.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது